மீண்டும் முன்னாள் காதலியுடன் இணையும் சிம்பு!

நடிகர் சிம்பு மீது பல காதல் கிசுகிசுக்கள் வந்துள்ளது. இதில் மிகவும் பேசப்பட்டது நயன்தாராவுடனான காதல் தான். இந்த காதல் பிரிந்தவுடன் இவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது சர்ச்சையாகியது.

அதன் பின் சிம்புவுடன் நடிகை ஹன்சிகா மோத்வானியை இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வெளிவந்தன. இவர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இந்த காதல் திருமணத்தில் தான் சென்று முடியும் என்று ரசிகர்கள் உள்பட அனைவரும்எதிர்பார்த்த நிலையில் இந்த காதலும் பிரிந்தது.

இந்நிலையில் சிம்பு வெங்கட்பிரபுவுடனான மாநாடு பட வேலைகளுக்கு இடையே ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகிவரும் மஹா படத்திலும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளாராம். அதாவது ஒரு பாடல் காட்சியில் மட்டும் சிம்பு நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Suggestions For You

Loading...