தல 59 படத்தில் ஷரதா ஸ்ரீநாத் கதாபாத்திரம் இது தான் – அவரே கூறிவிட்டார் !

ajith

அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள இப்படம் “பிங்க்” என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக்கும்.

அமிதாப் பச்சன், டாப்ஸ் நடித்து ஹிந்தியில் பல பாராட்டுகளை பெற்ற படம் “பிங்க்”. இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

மேலும் டாப்ஸி கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ஷரதா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இதை அவரே தற்போது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.

இதுக்குறித்து இவர் டுவிட்டரில் ‘எல்லோருக்கும் ரொம்ப பெரிய பெரிய நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலரும் தன்னை நீங்கள் அஜித்துடன் நடிக்கப்போகிறீர்களா? என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.

அது இன்று நிறைவேறிவிட்டது, ஆம் நான் இந்த படத்தில் இருக்கின்றேன், காலையிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்துக்கொண்டே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...