NGK தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஹீரோ இவர் தான் – புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியானவர். இவரத்தில் படங்கள் காலம் கடந்து பேசப்படும்.

"காதல் கொண்டேன்","7ஜி ரெயின்போ காலனி”, “புதுப்பேட்டை", “ஆயிரத்தில் ஒருவன”, “மயக்கம் என்ன", "இரண்டாம் உலகம்” எனப் பல படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை” படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் இவர் இயக்கியுள்ள “NGK” படமும் விரைவில் வெளியாகஇருக்கிறது.

தற்போது இவரில் அடுத்த பட தகவல் வந்துள்ளது, ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தற்போது தனது 24வது படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, 25வது படமாக தன் அண்ணன் மோகன்ராஜாவின் இயக்கத்தில் `தனிஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களின் வேலைகளை முடித்துவிட்டு செல்வராகவனின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Suggestions For You

Loading...