மணி ரத்னம் படத்தில் ஜோடியாக நடிக்கும் சரத் குமார் – ராதிகா!

மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த தனா படை வீரன் படத்தின் மூலம் இயக்குனரானார். தற்போது இவர் அடுத்த விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

மணிரத்னம் கதை, வசனம் எழுதும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் சரத்குமாரும் ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க இருக்கிறார்கள். சரத்குமார் நடிப்பில் அடங்காதே படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜிவி.பிரகாஷ், சுரபி நடித்துள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார்.

சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து ஏற்கனவே நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் படங்களில் நடித்து உள்ளனர். மணிரத்னம் படத்துக்காக 3வது முறையாக இணைகின்றனர்.

Suggestions For You

Loading...