28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் தளபதி கூட்டணி – அடுத்த ரஜினி படம்!

மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த படம் தளபதி, 1991ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு மயில் கல்லாக அமைந்தது.

ரஜினிகாந்தின் மாஸ் & கிளாஸ் படம் என்றால் அது தளபதிதான். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றினார், இவர் தீவிர ரஜினி ரசிகரும் கூட.

சில மாதங்களுக்கு முன் மணிரத்னம், நான், ரஜினி சார் மீண்டும் இணைந்தால் எப்படியிருக்கும் என்பது போல தான் டுவிட் செய்து வந்தார்.

தற்போது மணிரத்னம் மட்டும் தான் இல்லை, மற்றப்படி முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் உறுதியாகியுள்ளது. இது குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவது உற்சாகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Suggestions For You

Loading...