சந்தானத்தின் ஏ1 படத்தை தடை செய்யவேண்டும் – புதிய பிரச்சனை!

நாளைய இயக்குனர் சீசன் 4 டைட்டில் வின்னர் ஜான்சன்.கே இயக்கியுள்ள படம் ஏ1. அதாவது அக்யூஸ்ட் நம்பர் 1. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக தாரா எனும் புதுமுக நடிகையும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தடைசெய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவுது டீசர் நேற்று மலை வெளியானது அதில் சந்தானம் லோக்கல் பையனாகவும் நாயகி தாரா அஹ்ரகாரத்துப் பெண்ணாகவும் உள்ளனர் இவர்களுக்கு இடையே உள்ள காதல் தான் படத்தின் கதை

நேற்று வெளியான டீசரில் உள்ள வசனங்கள் பிராமண சமுதாய வாழ்க்கை முறையையும் அவர்களுடைய நடைமுறையையும் கேலி கிண்டல் செய்யும் படி உள்ளது என்று புகார் விடுத்துள்ளனர்.

Suggestions For You

Loading...