ரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் – மாஸ் தான் அப்போ!

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில், இவரது நடிப்பில் ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து இம்மாதம் சிந்துபாத் படம் வெளியாகவுள்ளது. இதில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sanga Tamizhan
Sanga Tamizhan First Look

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர் விஜய் சேதுபதியை வைத்து ‘சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். முறுக்கு மீசையுடன் விஜய் சேதுபதி தோன்றும் ‘சங்கத்தமிழன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

விஜய் சிறந்த நடிகர் கிடையாது – பிரபல வில்லன் நடிகர் அதிரடிபேச்சு!

இந்த படத்தில் ரஜினியின் படங்களைப் போல் வசனங்கள் அனைத்தும் மாசாக இருக்கும் என விஜய்சந்தர் சொல்லியிருந்தார். படத்தின் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். மேலும், விவேக் மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். நாசர், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Suggestions For You

Loading...