5 நிமிட காட்சிக்கு சமந்தா கேட்ட சம்பளம் -வாயை பிளக்கும் திரையுலகம்!

samantha

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்கிறார்.

தெலுங்கு நாகார்ஜூனா தயாரித்து நடித்து வரும் திரைப்படம் ‘மன்மதுடு 2’. இந்த படத்தின் படப்ப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கேரக்டரில் சமந்தாவை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

சிறப்பு தோற்றத்தில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே இப்படத்தில் நடிக்கும் இவருக்கு ரூபாய் 35 லட்சம் சம்பளமாம். இந்த செய்தி வெளியானதில் இருந்து டோலிவுட்டில் இது பற்றிய பேச்சு தான்.

நாகார்ஜுனா சமந்தாவின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...