விஜய் சேதுபதி படத்தின் இணைந்த சமந்தா – இப்படியொரு கதாபாத்திரமா?

“ஆரண்ய காண்டம்” பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் விஜயசேதுபதியுடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தா தனக்குத்தானே டப்பிங்கும் பேசியிருக்கிறார். கோடையில் இப்படம் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் சமந்தா இணைந்துள்ளதார். டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் துக்ளக் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறாராம். இது குறித்த தகவல் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...