பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமாவில் ஒரு ஜாம்பவானாக திகழ்கிறார். இவரது படைகள் ஒளிபரப்பாத இடமே இருக்காது என்று கூறலாம், ஏனென்றால் அவ்வளவு பாடல்கள் பாடியுள்ளார்.
தற்போது பாடுவதை குறைத்துக்கொண்டு இவர் சமீபத்தில் திருப்பதி சென்ற இடத்தில் பத்திரிகையாளர்களிடம் நடிகைகள் உடை அணிவது குறித்து கருத்து தெரிவித்தார்.

இதில் “சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாயகிகள் ஆபாசமாக உடையணிந்து உடலைக் காட்டுகிறார்கள்.
பொது நிகழ்ச்சிகளுக்கு எப்படி உடையணிய வேண்டும் என்ற உணர்வு இல்லை. உடலைக் காட்சிப் பொருளாக காட்டினால் தான், அந்த விழாவுக்கு வரும் இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ வாய்ப்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.
நமது கலாச்சாரம், சமூக அக்கறை உள்ளிட்டவை எதுவுமே இல்லாமல் போய்விட்டது. எனது இந்தப் பேச்சு பல நாயகிகளுக்கு கோபத்தை வரவைக்கும்” என்று கூறியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இதனால் பெண்கள் அமைப்புகள் இதனை எதிர்த்து பேச விசயம் சர்ச்சையானது. இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் இது விவாதமாக பேசப்பட்டது. இதில் சிலர் கலந்துகொண்டனர்,
அதில் எஸ்.பி.பி சொன்னதில் தவறில்லை. பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதால் தான் பாலியல் கொடுமைகள் நடக்கிறது என்பதால் அவர் அப்படி கூறியுள்ளார் என கூறினர்.
இந்நிலையில் எஸ்.பி.பி வெளியிட்டுள்ள அறிக்க்கையில் எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.