யாரும் நெருங்க முடியாத சாதனையை படைத்த ரவுடி பேபி பாடல் – NO 1 இடம்!

மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள “ரவுடி பேபி” வீடியோ பாடல் செம வைரலாக பரவியது, யுவன் ஷங்கர் ராஜா இசையில் பிரபுதேவாவின் நடன அசைவில் பட்டி தொட்டியெல்லாம் பாடல் பரவியது.

இதில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் பெரிய அளவில் கவர்ந்தது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடல் தொடர்ந்து பல பாடல்கள் மற்றும் வீடியோக்களின் சாதனைகளை முறியடித்த வண்ணம் இருந்தது.

தமிழ் பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற “Why this Kolaveri” பாடலை சமீபத்தில் முறியடித்தது. தற்போது தென்னிந்தியாவிலே அதிக பார்வையாளர்களை பெற்ற “வச்சிண்டே” என்ற தெலுங்கு பாடலின் சாதனையையும் முறியடித்துள்ளது.

182 மில்லியன் பார்வையாளர்களுடன் தென்னிந்திய அளவில் முதலிடத்தில் இருந்த சாய் பல்லவியின் தெலுங்கு பாடலான வச்சிண்டே பாடலின் சாதனையை முறியடித்து ரவுடி பேபி பாடல் முதலிட அரியணையில் ஏறியுள்ளது.

தற்போது ரவுடி பேபி பாடல் 183 மில்லியன் பெற்றுள்ளது. இந்த சாதனையை தனுஷ் தந்து Facebook பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Suggestions For You

Loading...