சீனாவில் வசூலை அள்ள காத்திருக்கும் 2.0 – பிரம்மாண்ட ரிலீஸ்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் பிரமாண்ட படைப்பாக உருவான படம் 2.0. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி தமிழில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கல்லா கட்டியது.

இந்த நிலையில், தற்போது சீனாவில் வெளியாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், வரும் ஜூலை 12ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. அதுவும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகயிருப்பதாக கூறப்படுகிறது. 2.0 என்ற டைட்டிலில் தமிழில் வெளியான இப்படம் பாலிவுட்டில் ரோபோட் 2.0 என்ற டைட்டிலில் வெளியானது. இந்த நிலையில், ரோபோட் 2.0 என்ற டைட்டிலுடன் சீன மொழியிலும் ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை எச்.ஒய் என்ற நிறுவனம் சீனாவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...