அவெஞ்சர்ஸ் படத்தில் “அயன் மேன்” நடிகரின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? தலை சுற்றிப்போகும் தகவல்!

iron-man-2

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களில் மிக பிரபலமானவை “அயன் மேன்” தொடர் திரைப்படங்கள். இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் ‘அயன் மேன்’ கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கும்.

“அயன் மேன்” கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஹாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார்.

அயன் மேனாக நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியர் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வாரில் நடிக்க ரூ. 524 கோடி சம்பளம் வாங்கினாராம். மேலும் ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார் அவர். நாள் ஒன்றுக்கு அவர் 5 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கியுள்ளார்.

தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கேப்டன் அமெரிக்கா கிறிஸ் இவான்ஸ், ஸ்கார்லட் ஜொஹன்சன் ஆகியோர் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் நடிக்க ரூ. 139 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர்.

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் செய்தது. அண்மையில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ 7 நாட்களில் ரூ.9,000 கோடி வசூல் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...