பிரபல நடிகரை காதலிக்கும் ரெஜினா கசாண்ட்ரா? – புகைப்படம் உள்ளே!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா.

நிறைய தெலுங்கு படத்திலும் நடித்துள்ள இவர் பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜுடன் இணைந்து நடித்தார் ரெஜினா.திரையில் இருவருக்கும் காதல் காட்சிகள் இயல்பாக வந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது.

திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில் கிசுகிசு நிலவுகிறது.

இதுகுறித்து சாய் தரம் தேஜிடம் கேட்டபோது ஒரே வரியில் பதில் அளித்தார். அவர் கூறும்போது, ’நானும் ரெஜினாவும் உண்மையான நண்பர்களாக இருக்கிறோம்’ என்றார். ரெஜினாவும் இந்த கிசுகிசுவை மறுத்து இருக்கிறார்.

Suggestions For You

Loading...