வர்மா படம் மூலம் 7 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில்க்கு வரும் பிரபலம்!

“அர்ஜுன் ரெட்டி” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

படம் முடிந்து வெளியாகும் தருணத்தில் “வர்மா” கைவிடப்பட்டது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக இளம் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. “அர்ஜுன் ரெட்டி” தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் “வர்மா” படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 7ஆம் அறிவு படத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்களுக்கு பிறகு, ரவி கே.சந்திரன் ஒபப்பந்தமாக தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...