தோல்வியின் எதிரொலி.. சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்?

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரேவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடந்த்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ரஜினிகாந்த் இப்படத்திற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினி இந்த படத்திற்கான தனது சம்பளத்தை குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் ரஜினியை வைத்து இதற்குமுன் தயாரித்த ‘2.0’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் தமிழ்நாட்டில் வசூலிக்கவில்லை.

வெளிநாடுகளில் நல்ல வசூல் வந்தாலும் அதில் தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை என கூறப்படுகிறது. அதனால் அடுத்த படத்தில் ரஜினி தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டுள்ளார்.

Suggestions For You

Loading...