மோடி தமிழகத்தில் தோற்றது இதனால் தான் – ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

rajinikanth

ரஜினிகாந்த் தற்போது தர்பார் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இவர் சில மணி நேரங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தார்.

அப்போது அவரிடம் அரசியல் குறித்து பல கேள்விகள் கேட்க, அவரும் பொறுமையாக பதில் அளித்தார், கமல் குறித்த கேள்விக்கு ‘கட்சி ஆரம்பித்து ஒரே வருடத்தில் இவ்வளவு வாக்கு வாங்கியது பெரிய விஷயம், அவருக்கு என் வாழ்த்துக்கள்.

மேலும், “மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி. மக்களை கவரக்கூடிய தலைவரால்தான் கட்சிக்கு வெற்றி. அப்படி கவரக்கூடிய தலைவராக மோடி உள்ளார். நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய்க்கு பிறகு ஈர்க்க கூடிய தலைவராக மோடி உள்ளார். தலைவரை முன்னிறுத்திதான் வெற்றி கிடைக்கும்.

தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான மனநிலை நிலவியது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம். தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது.

Suggestions For You

Loading...