பிக் பாஸ் வீட்டில் இருந்து ரஜினி புகைப்படம் நீக்கப்பட்ட காரணம் வெளியானது!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று பிரபல தொலைக்காட்சியில் நேற்று தொடங்கியது. வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்துவழங்குகிறார்.

பிக்பாஸ் வீட்டின் உட்புற வடிவம் மாற்றப்பட்டுள்ளது. பல ஓவியங்கள், தமிழ்நாடு கலாச்சாரம், கிராமத்து தோற்றம் என பாரம்பரிய தோற்றத்தில் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டிற்குள் விருமாண்டி தோற்ற கமல்ஹாசன் ஓவியமும், பேட்ட ரஜினிகாந்த் ஓவியமும் வரையப்பட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த் ஓவியம் புகை பிடிப்பது போன்று வரையப்பட்டது.

ஆனால் கடந்த வாரம் வரை இருந்த அந்த ரஜினியின் ஓவியம் சில நாட்களுக்கு முன்பு திடீரென நீக்கப்பட்டு விட்டதாம். பிக்பாஸ் வீட்டுக்குள் ரஜினிகாந்த் ஓவியம் என செய்திகள் வெளியான பிறகு அந்த ஓவியத்தை திடீரென நீக்கியதன் காரணம் தெரியவில்லை.

இருப்பினும் புகை பிடிப்பது போன்று இருந்த காரணத்தால் அதை நீக்கியிருக்கலாம் என்கிறார்கள்.

Suggestions For You

Loading...