தர்பார்: ரஜினியின் புதிய கெட் அப் கசிந்தது – வைரலாகும் புகைப்படங்கள்!

darbar

பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 167ஆவது படமான தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க மும்பையின் நடக்கவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகரியாக நடிக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக 25 ஆண்டுகளுக்கு முன் 1992 ஆம் ஆண்டு பாண்டியன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் காவல்துறை அதிகாரியாக தர்பாரில் நடிக்கிறார்.

தற்போது ரஜினியின் கெட் அப் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆகியுள்ளது. கருப்பு தலை முடி. தாடி கெட் அப்பில் தோன்றும் ரஜினியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Suggestions For You

Loading...