ரஜினி-விஜய் நேரடி மோதல் உருவாகிறதா?

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அதை தொடர்ந்து விஜய்யின் 64-வது படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க இருக்கிறது. இப்படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதே பொங்கல் தினத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் பொங்கலுக்கு ரஜினி- விஜய் படங்கள் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Suggestions For You

Loading...