மாணவர்கள் கல்வீசி தாக்குதல் – தர்பார் படப்பிடிப்பு நிறுத்தம்!

darbar-rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167 வது படம். இதில் ரஜினியை அவரின் மூன்று முகம் படம் போல காட்ட இருக்கிறார்களாம்.

ரஜினி போலிஸ் வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நிவேதா தமோஸ், யோகி பாபு நடித்து வருகிறார்கள்.

மும்பையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.

“விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை – அஜித்தே வருத்தப்பட்டு கூறியது!

இந்நிலையில் அந்த கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லெறிந்ததால் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. வேறு ஒரு இடத்தில் ஷூட்டிங் நடத்த முடிவெடுத்து அதற்காக இடம் தேடிவருகிறதாம் படக்குழு.

மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது, படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகில் நடமாட கூடாது என்று பல நிபந்தனைகள் போடப்பட்டது மாணவர்களின் கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...