உலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை – இவர்களுள் யார் முதலிடம்?

ரஜினிகாந்த், அஜித், விஜய் இவர்கள் தான் பாஸ் ஆபீஸ் மன்னர்கள். எந்த ஒரு சாதனையாக இருந்தாலும் இவர்களை தாண்டி தான் செய்யமுடியும். உலக அளவில் மார்க்கெட் வைத்திருக்கும் இவர்களின் படங்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு நாடு கடந்த உயர் நிலையிலான மார்க்கெட் உள்ளது. கபாலி, 2.0, பேட்ட படங்கள் பெரும் சாதனை செய்தன. விஜய்யின் மார்க்கெட்டும் உலகளவில் உயர்ந்து வருகிறது.

மெர்சல், சர்கார் என படங்கள் சிறப்பான வசூல் சாதனை நிகழ்த்தியது. அதே போல அஜித்தின் சினிமா மார்க்கெட்டும் நல்ல முறையில் இருந்து வருகிறது. விஸ்வாசம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர்கள் மூவரின் படங்கள் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என பார்க்கலாம்.

ரஜினிகாந்த் :

  • 2.0 : ரூ 110 கோடி – ஆல் டை நம்பர் 2 (இந்தியா)
  • கபாலி : ரூ 87.5 கோடி – ஆல் டை நம்பர் 3 (இந்தியா)
  • பேட்ட : ரூ 36.6 கோடி

விஜய் :

  • சர்கார் : ரூ 73.45 கோடி
  • மெர்சல் : ரூ 51 கோடி

அஜித் :

  • விஸ்வாசம் : ரூ 25.4 கோடி
  • விவேகம் : ரூ 36 கோடி

Suggestions For You

Loading...