அஜித்தின் 61வது படத்தை இயக்கும் மிரட்டலான இரண்டு இயக்குனர்கள்?

ajith

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடந்து அஜித்தின் 60வது படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார். அதையும் போனி கபூர் தான் தயாரிவுள்ளார் என்று உறுதியான செய்தி வந்துள்ளது.

இப்போது அவரது 61வது படம் குறித்து ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதாவது விக்ரம்-வேதா என்ற வெற்றி படத்தை கொடுத்த புஷ்கர்-காயத்ரி தான் அஜித்தின் 61வது படத்தை இயக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கைகளிலும் அதிக செய்திகள் வருகின்றன.

Loading...