விஸ்வாசம் பதில் இந்த காட்சியை விமர்சித்த பத்திரிகைக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வெளியான “விஸ்வாசம்” படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்களே கூறிவருவதை பார்க்கிறோம்.

இப்படத்துடன் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படமும் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் கொடுவிலார் பட்டி கிராமத்தில் இருக்கும் தூக்குதுரைக்கு எப்படி மும்பையில் எல்லா வழிகளும் தெரியும் என்று விகடன் பத்திரிக்கை விமர்சனம் செய்திருந்தது.

அதற்கு தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கோபி என்பவர் பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டரில் இவர் செய்த பதிவு இதோ..

“கொடுவிலார்பட்டி தூக்குதுரைக்கு மும்பைல எப்படி எல்லா ரூட்டும் தெரிஞ்சிருக்குனு லாஜிக்கா விமர்சனம் எழுதி இருக்காங்க விகடன் விமர்சன குழூ … அவரோட பொண்ணு சின்ன வயசுல இருந்து தூக்குதுரை மும்பைல குழந்தைய ஒளிஞ்சிருந்து பாலோ பண்ணுறத அந்த பாட்டுல காட்டுறப்ப எங்க கோமால இருந்தாங்களா இவங்க”

Suggestions For You

Loading...