15 வருடங்கள் கழித்து நடிக்க வரும் அஜித் பட நாயகி!

அஜித் நடித்த ராஜா படத்தில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா உபேந்திரா. இவர் கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி ஆவார்.

மேலும் இவர் காதல் சடு குடு படத்தின் விக்ரமுடன் நடித்திருப்பார். அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு குட் பாய் சொன்ன இவர் மீண்டும் நடிக்கவுள்ளார்.

தற்போது 15 வருடங்கள் கழித்து அவர் தமிழ் சினிமாவிற்கு நடிக்க திரும்புகிறார்.

பிக்பாஸ் மஹத் மற்றும் யாஷிகா ஜோடியாக நடிக்கும் படத்தில் தான் பிரியங்கா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்த படம் தமிழ்-கன்னடத்தில் ஷூட் செய்யப்படுவதால் வாய்ப்பு வந்ததும் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...