ஆதித்ய வர்மா படத்தின் இணைந்து மேலும் ஒரு ஹீரோயின்!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது.

விக்ரம் மகன் துருவ் அறிமுகமான இப்படத்தை பாலா இயக்கினார். படம் வெளியாகும் தருணத்தில் வர்மா படம் நின்றது அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

தயாரிப்பாளருக்கு படம் பிடிக்காததால் பாலா எடுத்த முழு படத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் புதிதாக எடுக்கவுள்ளனர்.

Adithya Varma First Look

ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ்வை மட்டும் வைத்துவிட்டு அனைவரையும் நீக்கி புதிய நடிகர் நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் தயாரிப்பாளர்.

தற்போது இப்படத்திற்கு ஆதித்ய வர்மா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை கிரிஷயா என்பவர் எடுக்கவுள்ளார், இவர் தான் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் கமிட் ஆக, இசையமைப்பாளர் ரதன் தான்.

மேலும் படத்தின் ஹீரோயினாக ஹிந்தி நடிகை பனிதா சந்து கமிட்டாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

வர்மா படத்தில் ரைசா நடித்த கதாபாத்திரத்தில் தான் தற்போது ப்ரியா ஆனந்த் கமிட் ஆகியுள்ளார்.

Suggestions For You

Loading...