சிம்பு படத்தை திரையிடுவதை தவிர்த்த பிரபல திரையரங்கம் – இது தான் காரணம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் “வந்தா ராஜாவாதான் வருவேன்”. கமெர்சியல் படமாக உருவாகிவுள்ள இப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நெல்லை ராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிம்பு படம் உட்பட இந்த வாரம் வரும் படங்கள் எதையும் வெளியிடப்போவதில்லை என கூறியுள்ளனர்.

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் தொடர்ந்து நல்ல வசூல் ஈட்டி வருவதால் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

இப்படத்தின் சிம்புவுடன் மெகா ஆகாஷ், கேத்தரின் திரேசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

Suggestions For You

Loading...