மோசமான நிலைமையில் கையும் காலுமாக மாட்டிக்கொண்ட பிரபல நடிகை!

pooja hegde

தெலுங்கில் உருவாகி வரும் ‘மகரிஷி’ திரைப்படத்தில் மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான விளம்பர வேலைகளில் நடிகை பூஜா ஹெக்டே ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் மற்றொரு விஷயத்தில் பூஜா முக்கிய செய்தியாக மாறியுள்ளார். Tollywood.net என்ற இணையதளத்தில் வெளியான தகவலின்படி, பூஜாவும் அவரது படக்குழுவினரும் போலீசில் வசமாக சிக்கியுள்ளனர்.

Pooja-Hegde
Pooja-Hegde

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லையெனினும் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஐதராபாத்தில் கடந்த மே ஒன்றாம் தேதி, ‘மகரிஷி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து படக்குழுவினர் ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு பூஜா உள்ளிட்ட பலரும் நன்கு மது அருந்தி உள்ளனர். பின்னர் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தனது மேனேஜர் உடன் பூஜா காரில் சென்றிருக்கிறார்.

pooja hegde
pooja hegde

அப்போது இடைமறித்த போலீசார், உரிய ஆவணங்களை காட்டுமாறு வலியுறுத்தினர். இந்த சூழலில் அனைவரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனே அவர்களது காரையும், பிற ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து படக்குழுவினர் மற்றொரு காரில் பூஜாவை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது பூஜாவோ அல்லது அவரது மேனேஜரோ வாய் திறந்தால் தான் உண்டு.

இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, வெங்கடேஷ் டகுபதி ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...