ரஜினியின் பேட்டயில் விஸ்வாசம் செய்ய கோலா மாஸ் சாதனை – அதிகரித்த திரையரங்குகள்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் “பேட்ட”. இப்படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியானது.

ரஜினியின் பேட்ட படம் அவர்களது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் படம் என்று தான் சொல்லவேண்டும். துறுதுறுப்பாக பழைய ரஜினியை இந்த படத்தில் பார்க்கமுடிந்தது. இதுவே இந்த படத்தின் வெற்றியை பெரிதாக்கியது.

தமிழகத்தில் மட்டுமே ரூ 150 கோடி வரை வசூல் வந்திருக்கும் என செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் பேட்ட படம் தான் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் அதிக திரையரங்கில் திரையிடப்பட்டது.

ஆனால், இரண்டாவது வாரமே விஸ்வாசம் திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பேட்ட படம் 32 திரையங்குகளிலும் விஸ்வாசம் படம் 46 திரையங்குகளிலும் திரையிடப்படுகிறது.

பல திரையரங்குகளில் பேட்ட படத்தை எடுத்துவிட்டு விஸ்வாசத்திற்கு அந்த பகுதியில் பெரிய ஸ்கிரீன் கொடுத்துள்ளார்களாம்.

Suggestions For You

Loading...