பேட்ட, விஸ்வாசம் தமிழ்நாடு உண்மையான வசூல் விவரம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

ரஜினிகாந்த், அஜித்தின் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் செம ஸ்பெஷலாக அமைந்தது. ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியாகி அன்று திருவிழா போல காட்சியளித்தது.

அது ஒருபக்கம் இருந்தாலும் வசூலில் யார் முன்னிலை என்ற போட்டி கடுமையாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் யார் முதலிடம் என்பது பெரிய விவாதத்தையே கிளப்பியது

சென்னை பொறுத்தவரை ரஜினியின் பேட்ட படம் அதிக வரவேற்பை பெற மற்ற இடங்களில் குறிப்பாக பி மற்றும் சி கிளாஸ் பார்வையாளர்களை விஸ்வாசம் வெகுவாக கவர்ந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க இரண்டு பட தயாரிப்பாளர்களும் ரு 100, 125 கோடி என கூறியது எல்லாம் ஒரு வகை ஈகோ மோதலே காரணம் என கூறப்படுகின்றது.

உண்மையாகவே விஸ்வாசம் தமிழகத்தில் நேற்று வரை ரூ 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல் பேட்ட ரூ 78 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Loading...