மலேசியா பாஸ் ஆபிஸை அதிரவைத்த பேட்ட, விஸ்வாசம் – இத்தனை கோடியா?

ரஜினிகாந்தின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்த மாதம் ஒரேய நாளில் வெளியாகி கோலமாக படுத்தியது. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் திருப்திப்படுத்தியது.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை எனபது போல இரண்டு படங்களை வசூலை அள்ளியது. தயாரிப்பாளர் முதல் தியேட்டர் வரை அனைவரும் இந்த படங்களால் லாபம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவில் பேட்ட தற்போது வரை ரூ 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், ரஜினியின் அதிக வசூலில் இப்படம் மூன்றாவது இடம் அங்கு.

அதே போல் விஸ்வாசம் தற்போது வரை ரூ 10 கோடி வசூலை கடந்துள்ளது, ஆனால், அஜித்திற்கு பெஸ்ட் மலேசியாவில் வேதாளம் தான்.

இந்த இரண்டு படங்களின் பிஸினஸ் மட்டும் மலேசியாவில் ரூ 25 கோடியை எட்டியது பெரிய விஷயம் என கூறப்படுகின்றது.

Loading...