சென்னையில் வசூல் மன்னன் யார் – பேட்ட, விஸ்வாசம் இரண்டு வார வசூல் விவரம் இதோ!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் கடந்த 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

படம் வெளியான நாள் முதல் யாருக்கு வசூல் அதிகம் என போட்டி கடுமையாக நடந்தது. தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வரை அனைவரும் இதற்கு போட்டிபோட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்து பேட்ட தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் 11 நாட்கள் முடிவில் பேட்ட சென்னையில் ரூ 11.45 கோடி வசூல் செய்துள்ளதாம்.

மேலும், விஸ்வாசம் ரூ 9.45 கோடி வரை வசூல் செய்துள்ளது, எப்படியும் இந்த இரண்டு படங்கள் சேர்த்து ரூ 25 கோடி வரை சென்னையில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Loading...