கேரளாவில் பேட்ட படம் மரண ஹிட் – விநியோகஸ்தரின் தகவல்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் “பேட்ட”. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளில் பேட்ட படம் நல்ல வரவேற்பை வருகிறது.

தற்போது பேட்ட படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள பிரபல நடிகரான ப்ருத்விராஜ் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், கார்த்திக் சுப்புராஜின் படங்களுக்கு பெரிய ரசிகன். ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்களை திரையில் பார்த்துள்ளேன் அது பாக்கியம்.

ரஜினி அவர்கள் போன்ற பெரிய நடிகருக்கு கதை எழுதுவது சாதாரண விஷயம் கிடையாது. மலையாள நடிகரான மணிகண்டனுக்கு எனது வாழ்த்துக்கள், படம் முழுவதும் ரஜினி அவர்களுடன் உள்ளார். படம் பார்க்கும் போது ஹிட் என நினைத்தேன், ஆனால் இந்த அளவிற்கு படத்தின் வரவேற்பு இருக்கும் என நினைக்கவில்லை. எல்லா இடத்திலும் படம் அட்டகாசமாக ஓடுகிறதை கேட்டு சந்தோஷம் அடைந்தேன் என்று பேசியுள்ளார்.

Loading...