சென்னையில் சர்கார் பட சாதனையை காலி செய்த பேட்ட – புதிய சாதனை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான “சர்கார்” படம் பல சர்ச்சைகளை தாண்டி ஓடியது. பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் பல வசூல் சாதனைகளை படைத்தது.

இப்படம் சென்னையில் மட்டும் ரூ 15 கோடி வரை வசூல் செய்தது, இதனால் அதிகம் வசூல் செய்த பட்டியலில் சர்கார் 3 வது இடத்தை பிடித்தது.

தற்போது பேட்ட அதை முறியடித்து ரூ 15 கோடிகளுக்கு மேல் சென்னையில் வசூல் செய்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. முதல் இடத்தில் 2.0, இரண்டாம் இடத்தில் பாகுபலி-2 இன்னும் தொடர்கின்றது.

பேட்ட படத்துடன் வெளியான விஸ்வாசம் படமும் வசூல் சாதனை படைத்தது வருகிறது. இரண்டு படங்களுமே இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...