அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் – அப்போ வெறித்தனம் தான்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே படம் வேற லெவெலில் இருக்கும். கடைசியாக வெளியான வட சென்னை படம் செம வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ள படம் “அசுரன்”. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துவருகிறார்.

அண்மையில் இப்படத்தில் வழக்கு எண் 18/9, காதல் படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் வில்லன் போலிஸ் கேரக்டரில் இணைந்தார். படம் நில அபகரிப்பு பற்றிய கதை கொண்டதாம்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் பட புகழ் பிரபல நடிகர் பசுபதியும் இணைந்துள்ளாராம்.

Loading...