இந்த பிரபல நடிகர் தான் 4 சூப்பர் ஸ்டார்க்கு சமம் – மேடையில் அடித்து சொன்ன நடிகர் பார்த்திபன்!

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவும் தவிர்க்கமுடியாத நடிகராகிவிட்டார், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் வட்டாரம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான “96” படம் மெகா ஹிட்டானது. இதன் 100 வது நாள் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பல பிரபலங்கள் மேடையில் பேசினார். அப்போது இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் பேசினார்.

இதில் அவர் விஜய் சேதுபதி இப்போது மக்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கிறார். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு. இதே போல அந்த காலத்தில் பிரபல நடிகர் எம்.கே.டி.தியாகராஜ பாகதவர் சூப்பர் ஸ்டாராக இருந்தார்.

அதிலும் அவர் 4 சூப்பர் ஸ்டார்களுக்கு சமம் என கூறினார். அதற்கு அடுத்த படியாக விஜய் சேதுபதிக்கும் இருக்கிறது என பார்த்திபன் பேசினார்.

Loading...