இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் தான் – ஓவியா அதிரடி பேட்டி!

அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 எம்.எல் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அடல்ட் படமாக உருவாகியுள்ள இப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் 1 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய ட்ரெய்லரில் இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “நான் எங்கு ஆபாசமாக நடித்துள்ளேன். பெண்கள் என்றால் அழுது கொண்டே வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா?.

நான் ஒன்றும் நிர்வாணமாக நடிக்கவில்லையே. பலாத்கார காட்சியிலும் நடிக்கவில்லை” என்றுள்ளார்.

மேலும் இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் தான் என்றும் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...