அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?

நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். வட சென்னை படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் அசுரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அப்பா- மகன் என்ற இரண்டு வித கதாபாத்திரங்களில் அப்பாவாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

ஆனால் மகனாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்கிற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...