என்.ஜி.கே படத்தின் ட்ரைலர், இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே.’ சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.

இப்படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது. தற்போது வரை 10 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது.

தொடர்ந்து தள்ளிப்போய்வந்த இந்த படம் மே31ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தற்போது ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

ஏப்ரல் 29ம் தேதி ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் வருவதால் தற்போது சூர்யா+யுவன் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Suggestions For You

Loading...