தெலுங்கில் என் ஜி கே படம் இத்தனை கோடி நஷ்டமா? வருத்தத்தில் ரசிகர்கள்

suriya

சூர்யா-செல்வராகவன் இணைகிறார்கள் என்பதுமே ரசிகர்கள் ஒரு பெரிய ஆவலில் இருந்தார்கள். கண்டிப்பாக படம் பெரிய லெவலில் இருக்கும் என்று நினைத்தனர்.

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தில் மட்டும் இப்படம் நல்ல வசூலை பெற்றுவருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கில் இப்படம் மிக பெரிய நஷ்டத்தை நோக்கி செல்கிறது.

தெலுங்கில் சுமார் 9 கோடி வரை விற்கப்பட்ட படம் 3 கோடி வரையில் மட்டுமே இதுவரை வசூல் செய்துள்ளதாம். அங்கு பெரிய தோல்வியை நோக்கி படம் போய்க் கொண்டிருப்பதாகவும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான நஷ்டம் அங்கு வரும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

Loading...