என்.ஜி.கே படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா! வெளியான கட் லிஸ்ட்

செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கான வியாபாரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப் படம் தென்கொரியாவிலும் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையை என்.ஜி.கே நிகழ்த்தியுள்ளது

கடந்த வாரம் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் U என வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் லிஸ்ட்டும் வெளிவந்துள்ளது.

அதில் ஒவ்வொரு ரீலுக்கும் குறைந்தப்பட்சம் ஒரு கெட்ட வார்த்தையாவது நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Suggestions For You

Loading...