“நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்து தான் எடுக்கப்பட்டது – சரியான தேர்வு!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று திடிரென்று வெளியாகி சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டு.

ஹிந்தி படமா பிங்க் படத்தின் ரீமேக் படமான இதற்கு “நேர்கொண்ட பார்வை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமையை பற்றி பேசும் இப்படத்தில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அனைவரும் இப்படத்தின் வித்யாசமா தலைப்பை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். பாரதியார் எழுதிய “பாரதி கண்ட புதுமை பெண்” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பாடல் பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்பதை கூறும் வகையில் இருக்கும். அப்படியொரு பாடலில் இருந்து தலைப்பு எடுக்கப்பட்டது இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

Loading...