நட்பே துணை திரை விமர்சனம்

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் நட்பே துணை படம் இன்று வெளியாகியுள்ளது.  சுந்தர் சி தயாரிப்பில் இப்படத்தை புதுமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.

நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, ஹரிஷ் உத்தமன், கரு பழனியப்பன்

இசை: ஹிப் ஹாப் ஆதி , இயக்குனர்: பார்த்திபன் தேசிங்கு , தயாரிப்பு: சுந்தர் சி

கதை:

நட்பே துணை படத்தில் ஹிப்பாப் ஆதி ஹாக்கி வீரராக வருகிறார். மோசமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கரு பழனியப்பன் நடித்துள்ளார். பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மைதானத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார்.

அந்த மைதானத்தை காப்பாற்றிக்கொள்ள அதே ஊரில் இருக்கும் French club hockey teamமுடன்  ஹிப் ஹாப் ஆதி டீம் விளையாடி ஜெயிக்க வேண்டும். அந்த போட்டியில் வென்றார்களா? அந்த மைதானம் மீண்டும் அவர்களுக்கே கிடைத்ததா எனபது தான் மீதி கதை.

விமர்சனம்:

இந்தியாவின் 19வயது உட்பட்டோர் ஹாக்கி டீமின் கேப்டனாக ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ளார். இவர்களின் நண்பர்களாக Youtube பிரபலங்கள் விக்னேஷ் காந்த், சாரா, எருமசாணி விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு பிரபலமான மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சரான இருக்கும் கரு பழனியப்பன் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்க நினைக்கிறார். அந்த காட்சிகளில் எல்லாம் அரசியல்வாதிகளின் மோசமான செயல்களை வெளியப்படையாக காட்டியுளளார் இயக்குனர்.

அந்த கதாபத்திரத்திற்கு கரு பழனியப்பன் மிக கச்சிதமாக பொருந்தியுள்ளார். ஹாக்கி பயிற்சியாளராக வரும் ஹரிஷ் உத்தமன் அந்த மைதானத்தை காப்பாற்ற தந்து வீட்டை விற்கும் அளவிற்கு செல்கிறார். படம் முழுக்க வரும் அந்த கதாபாத்திரம் நம் மனதில் நிற்கிறது.

இதற்கிடையில் ஹிப் ஹாப் ஆதி காதல், எருமசானி விஜய், சாராவுடன் செய்யும் காமெடி காட்சிகள் நிறைய இருந்தாலும் அதெல்லாம் எடுபடவில்லை. பாடல்கள் அனைத்தும் சுமார் ராகம் தான்.

அந்த மைதானம் தங்களை விட்டு பறிபோக கூடாது என்று ஹரிஷ் உத்தமன், ஹிப் ஹாப் ஆதி மற்றும் அவர்களது டீம் போராடிவருகிறது, இதற்கிடையே அரசியல்வாதியான கரு பழனியப்பன் செய்தும் சூழ்ச்சிகளை தாண்டி அந்த ஹாக்கி போட்டியில் வென்றார்களா? மைதானம் கிடைத்ததா என்பதுதான் கிளைமாக்ஸ்.

ஹிப் ஹாப் ஆதிக்கு ஹீரோயிசம் காட்டும் காட்சிகள் தேவையில்லாததாக தெரிகிறது, நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பியதால் பல இடங்களில் சலிப்பு தட்டுகிறது.

RATING: 3/5

Suggestions For You

Loading...