மிஸ்டர் லோக்கல் விமர்சனம்

mr local movie review

மிஸ்டர் லோக்கல் படத்தின் விமர்சனம், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

  • படம்: மிஸ்டர் லோக்கல்
  • நடிகர்கள்: சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, சதிஷ், ரோபோ ஷங்கர்
  • எழுத்து & இயக்கம்: எம். ராஜேஷ்
sivakarthikeyan
sivakarthikeyan

கதை:

மிடில் கிளாஸ் வாலிபராக வரும் சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

இவருக்கு அம்மாவாக நடித்துள்ளார் ராதிகா, ஒரு நாள் இருவரும் வெளியே செல்லும்போது ராதிகா மீது நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார்.

அப்போது தொடங்குகிறது இருவருக்குமான மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதை காமெடி ரொமான்ஸ் ஆக்க்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

sivakarthikeyan nayanthara
sivakarthikeyan nayanthara

விமர்சனம்:

சிவகார்த்திகேயனுக்கு இப்போது கஷ்டகாலம் போல, காமெடி, டைமிங் காமெடியின் கலக்கிவந்த இவருக்கு இந்த படத்தை பார்த்து ‘இவருக்கு என்ன தான் ஆச்சி’ என்று எண்ணம் தோன்றுகிறது.

நாம் பார்த்து பார்த்து வெறுத்துப்போன திரைக்கதை தான் இது. ஹீரோயின் நயன்தாரா பின்னாடி சுற்றி டார்ச்சர் செய்யும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வருகிறார்.

காமெடி காட்சிகள் வரும்போதெல்லாம் சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே போன்ற படங்கள் எடுத்த ராஜேஷ் தான் இந்த படத்தையும் எடுத்தாரா என்ற சந்தேகம் அடிக்கடி வருகிறது.

mr local
mr local

ரோபோ ஷங்கர் ஒரு இடத்தில் செய்து காமெடி தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது, சதிஷ், யோகி பாபு வரும் இடங்களில் ‘அட போங்கடா ரிமோட் இருந்தா ஒட்டிருப்பேன்’ என்று தோன்றுகிறது.

நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த இவர், இந்த படத்தை தேர்ந்தெடுத்தது தவறு என்று தோன்றுகிறது.

கை விட்டு எண்ணும் அளவிற்கான ஒரு சில கவுண்டர் டயலாக்ஸ் நன்றாக இருந்தது, ஒளிப்பதிவு அருமையாக இருந்தது.

இந்த ஹிப் ஹாப் ஆதி பற்றி சொல்லியே ஆகவேண்டும், அவர் வீட்டில் இருக்கின்ற அணைத்து இன்ஸ்ட்ருமென்ட்டையும் ஒரு நேரத்தில் பயன்படுத்து BGM கொடுத்துள்ளார். கேட்கும்போது தலை வலிக்கிறது.

மொத்தத்தில் படத்தை பற்றி பாசிட்டிவ் வார்த்தை என்று செல்வதற்கு எதுவும் இல்லை..

ரெடிங்: 2.75 / 5

Suggestions For You

Loading...