இந்த ரஜினி படத்தின் உல்டா தான் “மிஸ்டர் லோக்கல்” படமா?

ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் “மிஸ்டர் லோக்கல்” இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

“மிஸ்டர் லோக்கல்” டீசரில் மாடம் கதாநாயகியாக வரும் நயன்தாரா “நான் யார் தெரியுமா ?” என்று ஹீரோவிடம் சவால் விடுகிறார்,

மாடர்ன் கதாநாயகி கதாபாத்திரதை எடுத்து அதுவே புடவை கட்டிய கதாநாயகி என்றால் “மன்னன்” பட விஜயசாந்தி கதாபாத்திரத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆம் நாம் விசாரித்தவரையில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடித்து வெளிவந்த “மன்னன்” படத்தைத்தான் உல்டா செய்து, “மிஸ்டர் லோக்கல்” கதையாக உருவாக்கி இருக்கிறார்களாம்.

இந்தப் படத்தில் நயன்தாரா பெரிய கம்பெனியின் சிஇஓ என்றால், சிவகார்த்திகேயன் ஒரு லோக்கல் இளைஞன். நயன்தாராவை விரட்டி விரட்டிக் காதலிப்பவராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் என்று இந்த டீசரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.

இயக்குனர் ராஜேஷ், “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிக்காகக் காத்திருக்கிறார். இந்தப் படத்தையாவது ரசிக்கும் விதத்தில் கொடுத்திருப்பார் என்று நம்புவோம்.

Loading...