சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா? டப்மேஷ் புகழ்

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா.

மேலும் இப்படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

நேற்று சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர் வெளிவந்து செம வரவேற்பை பெற்று வருகிறது. ஆரண்ய காண்டம் போல இந்த படமும் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும் என தெரிகிறது.

இப்படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என மூன்று பெண்களை தான் காட்டினார்கள். ஆனால், இதில் மேலும் ஒரு பெண் இடம்பெற்றுள்ளார்.

இந்த காட்சியில் இளைஞர்களுக்கு முன்பு நிற்கும் பெண் வேறு யாருமில்லை, டப்மேஷ் புகழ் மிருணாளனி தானாம். இதோ படப்பிடிப்பு தள புகைப்படம்.

Suggestions For You

Loading...