சூர்யாவுக்கு வில்லனாக மாறிய பிரபல காமெடி நடிகர் – இப்படியொரு கதாபாத்திரமா?

suriya

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் “காப்பான்”. மிக பெரிய பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் தொடரவுள்ளது.

இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்டோர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகரான மயில்சாமி இணைந்துள்ளார். ஆனால் இவருக்கு இப்படத்தில் நெகடிவ் கதாபாத்திரம், வில்லன்களில் ஒருவராக வரவுள்ளதாக கூறப்படுகிறது.

நகைச்சுவையில் மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் இவர் பாராட்டுகளை வாங்கியவர் என்று குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suggestions For You

Loading...