கொலையை விட பெரிய குற்றம் இதுதான் – தோனி பேச்சு

உலகளவில் மிக பெரிய ரசிகர்களை கொண்டது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். இதன் 12வது சீசன் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஒன்றரை மாதம் நடக்கவுள்ளது.

இதில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் இந்த அணியின் கேப்டன்.

இந்நிலையில், சென்னை அணியை பற்றி உருவாகி உள்ள டாக்குமென்டரி படத்தின் டிரெய்லர் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வரும் தோனி கூறியிருப்பதாவது:

தன் வாழ்க்கையில் கொலையை விட பெரிய குற்றமாக கருதுவது மேட்ச் பிக்சிங்கை தான். அந்த குற்றச்சாட்டு அணி மீதும் தன்மீதும் எழுந்தது.

அப்போது அனைவருக்கும் கஷ்டமான சூழலை உருவாக்கியது. இந்த குற்றச்சாட்டால் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரசிகர்கள் மிகவும் மோசமானதாக கருதினர்.

ஆனால், சென்னை அணி மீண்டும் திரும்பி இருக்கிறது. அது உணர்ச்சிகரமான நிகழ்வு, என்று டிரெய்லரில் கூறியிருக்கிறார்.

Loading...