சுருட்டுடன் ராதிகா கொடுத்த போஸ் – மார்க்கெட் ராஜா கலக்கல் ஃபர்ஸ்ட் லுக்

Market Raja MBBS-2

காதல் மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சரண். கடைசியாக 2017ஆம் ஆண்டு வினய் ஹீரோவாக வைத்து ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியிருந்தார்.

இப்போது இரு வருட இடைவெளிக்குப் பிறகு புதிய படமொன்றை இயக்கி வருகிறார் சரண். பிக் பாஸ் புகழ் ஆரவ், ராதிகா நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்கிற சரண் இயக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. வட சென்னை டான் ஆக ராதிகா இப்படத்தில் நடிக்கிறார்.

இதையும் படிக்க: அஜித் கடைசியாக பார்த்த விஜய் படம் – பிரபல இயக்குனர் கூறிய தகவல்!

Market Raja MBBS
Market Raja MBBS

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ராதிகா ரவுடியாகவும், அவரிடம் பணிபுரியும் நபராக ஆரவ் நடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் நடிகை ராதிகா சரத்குமார் சுருட்டு பிடித்திருப்பது போன்றும் தோன்றியுள்ளார்.

மார்க்கெட் ராஜா, ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...