இவர்கள் நினைத்தால் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தலாம் – பிரபல நடிகர் வேண்டுகோள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று ஒரு இந்திய விமானப்படை போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானி அபிநந்தனை கைது செய்துள்ளது.

அங்கே அவரை கைதியாக வைத்திருக்கும் பாகிஸ்தான் அடுத்தகட்ட நடிவடிக்கை என்ன என்பது தெரியவில்லை.

இது பற்றி மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மாதவன், “இது தீவிரவாதத்திற்கு எதிரான போர், இரண்டு நாடுகளுக்கு நடுவில் இல்லை. மீடியா நினைத்தால் இது போராக மாறாமல் தடுக்க முடியும். பொறுப்புடன் செயல்படுங்கள், அமைதி வரட்டும்” என கூறியுள்ளார்.

Loading...